உலக வங்கியின் தெற்காசிய வலயத்திற்கான உப தலைவர் இலங்கை விஜயம்!

Monday, August 29th, 2016

உலக வங்கியின் தெற்காசிய வலயத்திற்கான உப தலைவரான எனட் டிக்சன் இருநாள் விஜயம் மேற்கொண்டு இலங்கை வந்துள்ளார்.

கடந்த 2014ம் ஆண்டு பதவியேற்றதன் பின்னர் அவர் இலங்கைக்கு மூன்றாவது முறையாக தற்போது விஜயம் செய்வதாக, உலக வங்கி குறிப்பிட்டுள்ளது.

இதன்படி இன்று நாட்டிக்கு வந்துள்ள எனட் டிக்சன் அரசாங்கத்தின் சிரேஷ்ட அதிகாரிகள் குழுவுடன் கலந்துரையாடல்களை மேற்கொள்ளவுள்ளார்.

மேலும், வடக்கில் மேற்கொள்ளப்படும் சில வேலைத் திட்டங்களையும் அவர் பார்வையிடவுள்ளதாக கூறப்படுகின்றது.

Related posts: