உலக சுகாதார ஸ்தாபனத்தினால் தேர்வு செய்யப்பட்ட 5 நாடுகளில் இலங்கையும் உள்ளடக்கம்!

Monday, July 12th, 2021

கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்கு உலக சுகாதார ஸ்தாபனத்தினால் வழங்கப்படும் 2 இலட்சம் அமெரிக்க டொலர் நிதியுதவி மற்றும் 2 இலட்சம் அன்டிஜன் பரிசோதனை உபகரணங்களைப் பெறுவதற்குத் தகுதிபெற்றிருக்கும் 5 நாடுகளில் இலங்கையும் உள்ளடக்கப்பட்டிருக்கின்றது.

இதுகுறித்து ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் நோயெதிர்ப்பு மற்றும் மூலக்கூற்று மருத்துப்பிரிவின் பணிப்பாளர் விசேட வைத்தியநிபுணர் சந்திம ஜீவந்தர கூறுகையில் –

உலக சுகாதார ஸ்தாபனத்தினால் கடந்த வருடம் டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் தொற்றை இனங்காண்பதற்கான அன்டிஜன் பரிசோதனையை முன்னெடுப்பதற்கு அவசியமான உபகரணங்கள் மற்றும் நிதியுதவியை பெற நாம் கோரிக்கை விடுத்திருந்தோம்.

பல்வேறு நாடுகளாலும் முன்வைக்கப்படும் கோரிக்கைகளில் போட்டித்தன்மையின் அடிப்படையில் தெரிவுசெய்யப்பட்ட ஐந்து நாடுகளுக்கு மாத்திரமே உலக சுகாதார ஸ்தாபனத்தினால் மேற்படி நிதியுதவி வழங்கப்படும்.

இந்நிலையில் குறித்த விண்ணப்பத்துடன் நாம் முன்வைத்திருந்த மாதிரி செயற்திட்டமானது அங்கீகரிக்கப்பட்டு, நிதியுதவியைப் பெறுவதற்குத் தகுதிபெறும் 5 நாடுகளில் இலங்கையும் உள்ளடக்கப்பட்டிருக்கின்றது என அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பீடத்தக்கது.

Related posts: