உலக அமைதி வேண்டி திருநெல்வேலி பகவான் ஸ்ரீ சத்திய சாயி சேவா நிலையத்தில் ஸ்ரீருத்ர ஏகாதசனி மந்திரப்  பாராயணம்

Saturday, April 16th, 2016

ஸ்ரீ  சத்திய சாயி ஆராதனா மஹோற்சவத்தை முன்னிட்டு உலக அமைதி வேண்டி திருநெல்வேலி பகவான் ஸ்ரீ சத்திய சாயி சேவா நிலையத்தில் ஸ்ரீருத்ர ஏகாதசனி மந்திரப்  பாராயணம் தொடர்ச்சியாக நடாத்தப்பட்டு வருகின்றது. கடந்த மார்ச் மாதம் -23 ஆம் திகதி ஆரம்பமான ஸ்ரீருத்ர ஏகாதசனி மந்திரப்  பாராயணம்  எதிர்வரும் ஏப்ரல் மாதம்-23 ஆம் திகதி வரையான ஒரு மாத காலம் தொடர்ந்தும் இடம்பெறவுள்ளது.

தினமும் மாலை -4.30 மணிக்கு கணபதி மந்திரம், ஸ்ரீ ருத்ரம், சாயி ருத்ரத்தில்  ஸ்ரீ சாயிசமகம் உச்சாடனம், சுபீட்சப் பிரார்த்தனை  , ஸ்ரீசத்திய சாயி ஆராத்திப் பாடல் என்பன நடாத்தப்பட்டு அதனைத் தொடர்ந்து காயத்ரி மந்திர ஜெபம் ஓதல், பிரசாதம் வழங்கல் என்பன நடைபெற்று வருகிறது .

ஸ்ரீ ருத்ர ஏகாதசனி மந்திரப்  பாராயணம்  இடம்பெறும் அதேவேளையில் தினம் தோறும் சாயி அன்பர்களால் சிவலிங்கப் பெருமானுக்கு அபிஷேகம் நிகழ்த்தப்படும்.

இதேவேளை  இன்று வெள்ளிக் கிழமை (15-04-2016) ராம நவமியை முன்னிட்டு  பிற்பகல்-4 மணி தொடக்கம் 5  மணிவரை  சிறப்புப் பஜனை நடைபெற்றமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

Related posts: