உலகில் மோதல்கள் காரணமாக கடந்த வருடம் 167,000 பேர் பலி!

Friday, May 6th, 2016
உலகளவில் கடந்த வருடம் நடந்த மோதல்களில், சுமார் ஒரு இலட்சத்து 67 ஆயிரம் பேர் கொல்லப்பட்டுள்ளனர் என மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.
இந்த மரணங்களில் மூன்றில் இரண்டு, சிரியாவில் நடந்த மோதலில் கணக்கிடப்பட்டவை என கேந்திர ஆய்வுகளுக்கான சர்வதேச நிறுவன அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் 2014ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில், ஒட்டுமொத்த இறப்பில் வீழ்ச்சிக் காணப்படுகிறது.
ஆனால் ஆப்கானிஸ்தானில் நடந்த உயிரிழப்புகளில் குறிப்பிடத்தக்க உயர்வு காணப்படுகிறது. அங்கு கடந்த வருடம் மட்டும் மோதல் காரணமாக சுமார் 15 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர்.