உலகின் பிரமாண்டமான விமானம் தரையிறங்குமா?

Monday, February 20th, 2017

இலங்கையில் கேள்விக்குறியாக மாறிய மத்தல சர்வதேச விமான நிலையம், தற்போது பரபரப்பாக செயற்பட்டு வருவதாக விமான நிலைய முகாமைத்துவ பிரதானி உபுல் கலங்சூரிய தெரிவித்துள்ளார்.

கட்டுநாயக்க விமான நிலையத்தின் ஓடுபாதை நிர்மாணிக்கப்பட்டு வருவதால், அதன் விமான பயணங்கள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளன. இதன் காரணமாக மத்தல விமான நிலையம் பரபரப்பாகியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஜனவரியில் இருந்து இன்று வரையில் மத்தல விமான நிலையத்திற்கு கிட்டத்தட்ட 29 ஆயிரம் பயணிகள் வருகை தந்துள்ளனர்.

குறித்த காலப்பகுதியினுள் 284 விமான பயணங்கள் மத்தல விமான நிலையத்தின் ஊடாக மேற்கொள்ளப்பட்டுள்ளன.

பல்வேறு நாடுகளுக்கு தற்போது மத்தல விமான நிலையங்கள் ஊடாக பயணங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் எதிர்வரும் காலங்களில் உலகின் மிகப்பெரிய விமானமான ஏ380 விமானம் உட்பட மத்தல விமான நிலையத்தின் ஊடாக பயணங்களை மேற்கொள்ள முடியும் எனவும், அந்த விமானத்திற்கு தேவையான அனைத்து பாதுகாப்புகளை வழங்கும் வசதி காணப்படுகிறது.

தற்போது மத்தல விமான நிலையத்தினுள் பறவைகள், மிகருங்கள் காணப்படவில்லை எனவும் இதனால் விமானங்கள் தேசங்கள் எதுவும் ஏற்படாதெனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

rsz113073221

Related posts: