உலகின் சிறந்த 10 விமான சேவை நிறுவனங்களின் பட்டியலில் இணைந்த ஸ்ரீ லங்கன் எயார்லைன்ஸ்!

கொன்டே நெஸ்ட் சுற்றுலா இதழ் 2020 ஆண்டுக்காக வெளியிட்ட உலகின் சிறந்த 10 விமான நிறுவனங்களில் ஒன்றாக ஸ்ரீ லங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தையும் உள்ளடக்கியுள்ளது.
அந்த இதழின் வாசகர்களின் தேர்வுகளுக்கு அமைவாக குறித்த நிறுவனங்கள் பட்டியலிடப்பட்டுள்ளன.
இதனடிப்படையில் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனம் 6ஆவது இடத்தைப் பெற்றுக்கொண்டுள்ளது. அவுஸ்திரேலிய கொன்டாஸ் விமான சேவை நிறுவனம் 5ஆவது இடத்தையும், நியூசிலாந்தின் விமான சேவை 4ஆவது இடத்திலும், கட்டார் விமான சேவை 3ஆவது இடத்திலும், எமரிரேட்ஸ் நிறுவனம் இரண்டாவது இடத்தையும் சிங்கப்பூர் விமான சேவை நிறுவனம் முதலாவது இடத்தையும் பெற்றுக்கொண்டுள்ளன.
Related posts:
மாறுகின்றது காலநிலை : மக்களே அவதானம்!
இலங்கைக்கு வருகிறது மற்றுமொரு ஆபத்து!
பாடசாலை மாணவர்களுக்கு மீண்டும் மதிய உணவு - கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த நடவடிக்கை!
|
|