உற்பத்தி பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நட்டஈடுகள் – விவசாய காப்புறுதிச் சபையின் தலைவர்!

Sunday, March 5th, 2017

பெரும் போகத்தில் உற்பத்தி பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நட்டஈடுகள் வழங்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுளள்ளதாக விவசாய காப்புறுதிச் சபையின் தலைவர் சிட்னி கஜநாயக்க தெரிவித்துள்ளார்.

உற்பத்திக்காக செலவிடப்பட்ட தொகையில் மூன்றில் ஒரு பகுதி தொகை செலுத்தப்படுவது வழமையான நடைமுறையாகும். இருந்த போதிலும், ஜனாதிபதியின் ஆலோசனைக்கு அமைவாக அடுத்த போக உற்பத்தி நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படும் வரையில் 4 மாத காலப்பகுதிக்கு 10 ஆயிரம் ரூபா வீதம் விவசாயிகளுக்கு வழங்கத் தீர்மானிக்கப்பட்டிருப்பதாக குறிப்பிட்டார்.

நெல் உற்பத்திக்கு மேலதிகமாக ஏனைய ஊடுபயிர், தேயிலை, கறுவா, மிளகு போன்ற உற்பத்திகளுக்கும் காப்புறுதியைப் பெற்றுக்கொள்ள முடியும். இதனார் விவசாயிகளதும் தமது உற்பத்திக் காணியை காப்புறுதி செய்பவதில் ஆர்வம் செலுத்த வேண்டுமென்றும் விவசாய காப்புறுதிச் சபையின் தலைவர் சிட்னி கஜநாயக்க  விவசாயிகளுக்க அறிவுரை வழங்கிளார்.

பெரும் போகத்தில் உற்பத்தி பாதிக்கப்பட்ட விவசாயிகளுககான  நட்டஈடுகள் குறித்து மேலும் தெரிவிக்கையில் அனைத்து விவசாயிகளின் வங்கிக் கணக்குத் தொடர்பான தகவல்கள் விவசாhயப் பாதுகாப்புச் சபையிடம் உண்டு. இவற்றை அடிப்படையாகக் கொண்டு விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் பாதிப்பிற்கான முழுமையான தொகை வைப்பீடு செய்யப்படுமென்றும் என்றார்.

இவ்வாறான நடைமுறையை முன்னெடுக்கும் சந்தர்ப்பத்தில், அரசியல்வாதிகள் தமது கட்சிகளின் குறுகிய நோக்கங்களை நிறைவேற்றிக்கொள்வதற்காக விவசாயிகளை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுத்துவதற்கு இடமளிக்கக்கூடாது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.