உற்பத்தியாளர்களை ஊக்குவிக்க முல்லைத்தீவில் விஷேட சந்தை!

Friday, November 24th, 2017

முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள உற்பத்தியாளர்களின் பொருட்களை விற்பனை செய்யும் முகமாக விசேட சந்தை ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு மாவட்டத்தில் சமுர்த்தி திணைக்களத்தினால் ஊக்கிவிக்கப்பட்ட பயனாளிகளின் உற்பத்தி பொரு்களை விற்பனை செய்யும் முகமாக முல்லைத்தீவு மாவட்ட செயலகத்திற்கு முன்பாக மாவட்ட செயலாளர் ரூபவதி கேதீஸ்வரன் அவர்களினால் இச்சந்தை ஒரு நாள் சந்தையாக ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

அந்தவகையில் பொதுமக்களுக்கு குறைந்தவிலையிலும் தரமான பொருட்களையும் வாங்கக்கூடிய வசதிகள் ஏற்படுத்தி கொடுக்கப்பட்டு உற்பத்தியாளர்களை ஊக்கப்படுத்தும் நோக்கோடு இச்சந்தை இடம்பெற்றுள்ளது.

இதில் தேசியரீதியில் வெற்றிபெற்ற உற்பத்தியாளர்களுக்கு தேசியரீதியாக கிடைக்கப்பெற்ற சான்றிதழ்களையும் மாவட்ட செயலாளர் பயனாளிகளுக்கு வழங்கி வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: