உருளைக்கிழங்கு செய்கையாளருக்கு மானிய உதவி!
Friday, November 4th, 2016யாழ்.மாவட்டத்தில் சமுர்த்திக் குடும்பங்களைச் சேர்ந்த 90 விவசாயிகளுக்கு விதை உருளைக்கிழங்கு கொள்வனவு மானிய உதவியாக 27 லட்சம் ரூபா வழங்கப்படுகின்றது. ஒவ்வொரு விவசாயிக்கும் தலா 30ஆயிரம் ரூபா வழங்கப்படுகின்றது என்று தெரிவிக்கப்பட்டது.
உடுவில் பிரதேச செயலக பிரிவைச் சேர்ந்த 40 விவசாயிகளுக்கும், கோப்பாய் பிரதேச செயலகப் பிரிவைச் சேர்ந்த 20 விவசாயிகளுக்கும், சண்டிலிப்பாய்ப் பிரதேச செயலக பிரிவைச் சேர்ந்த 20 விவசாயிகளுக்கும், தெல்லிப்பழை பிரதேச செயலக பிரிவைச் சேர்ந்த 10 விவசாயிகளுக்கும் விதை உருளைக்கிழங்கு கொள்வனவு மானியமாக வழங்கப்படுகின்றது. குறித்த விவசாயிகளுக்கு விதை உருளைக்கிழங்கு மானிய உதவி வழங்குவது தொடர்பாக சம்பந்தப்பட்ட பிரதேச செயலகப் பிரிவு, வாழ்வின் எழுச்சி (சமுர்த்தி) அலகால் அறிவிக்கப்பட்டுள்ளது. உருளைக்கிழங்குச் செய்கையை ஊக்குவிக்கும் நோக்கில் கடந்த காலங்களிலும் இத்தகைய உதவிகள் வாழ்வின் எழுச்சித் திணைக்களத்தால் வழங்கப்பட்டன. கடந்த காலங்களில் மானிய உதவியைப் பெற்றுக்கொண்டவர்களைத் தவிர்த்து, புதிய விவசாயிகளுக்கு இந்த வருடம் வழங்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டது.
Related posts:
|
|