உருக்குலைந்த நிலையில் சடலம் மீட்பு!
Tuesday, October 4th, 2016
கிளிநொச்சி யூனியன்குளம் காட்டுப்பகுதியில் இருந்து உருக்குலைந்த நிலையில் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது.
இன்று குறித்த பகுதிக்கு விறகு வெட்டச் சென்றவர்களால், கிளிநொச்சிப் பொலிசாருக்கு தகவல் வழங்கப்பட்டதையடுத்து, கிளிநொச்சிப் பொலிஸ் தலைமையகப் பொறுப்பதிகாரி தலைமையிலான குழுவினர் முதலாம் கட்ட விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
குறித்த பகுதியில் சடலமாக மீட்கப்பட்டவர், சுமார் அறுபத்தி ஐந்து வயது மதிக்கத்தக்க ஓர் ஆண் எனவும் அவர் தன்வசம் வைத்திருந்த பொருட்களை பார்க்கும் போது அவர் மனநலம் பாதிக்கப்பட்டவராக இருக்கலாம் எனவும் பொலிசார் சந்தேகிக்கின்றனர்.
குறித்த சடலமானது, யூனியன்குளம் மக்கள் குடியிருப்பில் இருந்து பல கிலோமீற்றர் தொலைவில் காட்டுப்பகுதியில் உருக்குலைந்த நிலையில் காணப்படுவதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார்.
அத்துடன் குறித்த பகுதியில் மண்ணகழ்வு மற்றும் மரக்கடத்தல் போன்ற சட்டவிரோத செயற்ப்பாடுகள் நடைபெறுவதற்கான தடயங்களும் இருப்பதாகத் தெரிவிப்படுகிறது.
அத்துடன் கிளிநொச்சி குற்றத் தடயவியல் பொலிசாருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும் மேலதிக சோதனைகளையும் விசாரணைகளையும் ஆரம்பிக்க இருப்பதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.
Related posts:
|
|