உரிய பயிற்சியின்றி வெளிநாட்டுக்கு தொழில் செய்ய செல்ல முடியாது – அமைச்சர் தலதா திட்டவட்டம்!

Tuesday, November 22nd, 2016

வெளிநாடுகளில் தொழில் செய்வதற்கு, பயிற்சி பெறாத எவரும் இனிமேல் அனுமதிக்கப்படமாட்டார்கள் என வெளிநாட்டு வேலைவாய்ப்புத்துறை அமைச்சர் தலதா அத்துக்கோறளை தெரிவித்துள்ளார்.

“ரிசனா நஸீக்கு” ஏற்பட்ட நிலமை அனிமேல் எவருக்கும் ஏற்படக்கூடா என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். வெளிநாடுகளில் தொழில் புரியும் நபர்களின் பிள்ளைகளுக்கு புலமைப்பரிசில்க் வழங்கும் வைபவம் நேற்று முன்தினம் காலை காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் மண்டபத்தில் நடைபெற்றது. இதன்போது பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றியபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இந்த நாட்டில் பாலங்காலமாகப் புரையோடிப் போயிருந்த இனவாதம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோரின் நல்லாட்சியில் இல்லாதொழிக்கப்பட்டுள்ளது என அவர் மேலும் தெரிவித்துள்ளார். இந்நிகழ்வில் கிழக்கு மாகாணத்திலுள்ள மட்டக்களப்பு, அம்பாறை, மற்றும் திருகோணமலை மாவட்டங்களைச் சேர்ந்த வெளிநாடுகளில் தொழில் புரிவோரின் பிள்ளைகள் 643 பேருக்கு புலமைப் பரிசில்கள் வழங்கப்பட்டன. சுமார் 2 கோடி 45லட்சம் ரூபா புலமைப் பரிசிலாக வழங்கப்பட்டது.

post-1035

Related posts: