உரிய காலத்தில் பயிர்ச்செய்கையை மேற்கொள்ள மானிய உரம்!

கிளிநொச்சி மாவட்டத்தின் பூநகரி பிரதேசத்தின் கௌதாரி முனைப்பகுதியிலுள்ள விவசாயிகளுக்கு மானிய உரம் மற்றும் ஏனைய உள்ளீடுகளை மிக விரைவாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கமக்கார அமைப்பு கோரியுள்ளது.
பூநகரிப் பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட கௌதாரி முனைக் கிராமத்தில் வாழ்ந்து வரும் சுமார் 42 வரையான விவசாயக் குடும்பங்களும் கடற்றொழிலை நம்பி வாழ்ந்து வரும் 83 வரையான குடும்பங்களும் பல்வேறு துன்பங்களை எதிர்கொண்டு வருகின்றன.
இக்குடும்பங்கள் விவசாயத்தை வாழ்வாதாரமாகக் கொண்டு வாழ்ந்து வருவதாகவும் குறித்த பிரதேசத்தில் சுமார் 250 ஏக்கர் வரையான நிலப்பரப்பில் வருடாந்தம் மானாவாரிப் பயிர்ச்செய்கையாக காலபோக நெற்செய்கை மேற்கொள்ளப்படுவதாக தெரிவித்துள்ள கமக்கார அமைப்புக்கள் மழையை நம்பியே முழுமையான பயிர்ச்செய்கை மேற்கொள்ளப்படுவதனால் உரிய காலத்தில் தமது பயிர்ச் செய்கைகளை மேற்கொள்ள வேண்டிய தேவை காணப்படுகின்றது என்றும் தமக்கான உரமானியம் மற்றும் ஏனைய உள்ளீடுகளை மிக விரைவாக பெற்றுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Related posts:
|
|