உயிரிழந்த இந்திய மீனவர்களின் உடல்கள் ஒப்படைப்பு!

Saturday, January 23rd, 2021

இலங்கை கடற்படையின் கப்பலுடன் மோதி விபத்துக்குள்ளானதை அடுத்து உயிரிழந்த 4 இந்திய மீனவர்களின் உடல்கள் அந்நாட்டு அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக இலங்கை கடற்படை பேச்சாளர் கப்டன் இந்திக்க டி சில்வா தெரிவித்துள்ளார்.

சர்வதேச கடற்பரப்பில் வைத்து இன்று முற்பகலில் இந்த உடல்கள் இந்திய கடலோரக் காவற்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

கடந்த 18ஆம் திகதி இரவு இலங்கை கடற்படையின் அதிவேக ரோந்து கப்பலுடன் இந்திய மீனவர்கள் பயணித்த படகு மோதியதில் மூழ்கிய படகில் இருந்து 4 இந்திய மீனவர்கள் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts: