உயிரியல் எரிபொருள் மின்னுற்பத்தி திட்டம் ஆரம்பம்!

Sunday, May 7th, 2017

திருகோணமலை டோக்கியோ சீமெந்து நிறுவனத்தில் உயிரியல் எரிபொருள் மின்னுற்பத்தி திட்டத்தினை ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன ஆரம்பித்துவைத்துள்ளார்.

புதுப்பிக்கத்தக்க உயிரியல் எரிபொருள் பயன்பாட்டை பாரிய தொழிற்சாலைகளில் அமுல்படுத்தும் இலங்னையின் முன்னோடி தொழிற்சாலையான டோக்கியோ சீமெந்து நிறுவனம் 2.5 பில்லியன் ரூபா முதலீடு செய்து இந்த உயிரியல் எரிபொருள் மின்னுற்பத்தி திட்டத்தை ஆரம்பித்துள்ளது.

அதன் மூலம் 70 ஜிகாவோட் மின்சாரம் தேசிய மின் கட்டமைப்பில் சேர்க்கப்படும். சமூக அடிப்படை செயற்திட்ட எண்ணக்கருவிற்கமைய வழங்கப்படும் விவசாய மூலப்பொருட்களைப் பயன்படுத்தி இந்த மின்னுற்பத்தி மேற்கொள்ளப்படுகிறது. புதுப்பிக்கத்தக்க மூலங்களிலிருந்து உற்பத்தி செய்யப்படும் மின்சக்தி கொள்ளவை 2017ம் ஆண்டின் இறுதியளவில் 10 வீதத்தினால் உயர்த்துவதனை அரசாங்கம் இலக்காகக் கொண்டுள்ளது. தனியார் துறையினரும் அந்த சூழல் நேய முயற்சியில் இந்த திட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.

Related posts: