உயர் நீதிமன்றில் மேன்முறையீடு செய்தார் துமிந்த சில்வா!

Thursday, September 22nd, 2016

கொழும்பு மேல் நீதிமன்றம்  முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவுக்கு விதித்த மரண தண்டனை உத்தரவிற்கு எதிராக  உயர் நீதிமன்றில்  இன்று (22)  மேன்முறையீடு செய்யப்பட்டுள்ளது.

குறித்த மேன்முறையீடானது துமிந்த சில்வாவின் சட்டத்தரணியால் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பாரத லக்ஷ்மன் பிரேமச்சந்திர கொலை தொடர்பில் துமிந்த சில்வா மற்றும் நான்கு பேருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் கடந்த 8 ஆம் திகதி மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

asda1

Related posts: