உயர் தர பரீட்சையில் மோசடி: இரு அதிபர்கள் நீக்கம்!

Thursday, August 11th, 2016

நாட்டில் தற்போது நடைபெற்றுவரும் கல்வி பொதுத்தராதர உயர்தர பரீட்சையில், முறைகேடுகளில் ஈடுபட்டதாக சுமத்தப்பட்ட குற்றச்சாட்டின் அடிப்படையில் இரண்டு அதிபர்கள் இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளனர்.

நுவரெலியா சென் சேவியர்ஸ் கல்லூரியின் அதிபர் மற்றும் நாத்தாண்டிய அல் ஹீஜிராகல்லூரியின் அதிபர் ஆகியோர்களே இவ்வாறு   பணிகளில் இருந்து இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்படுகின்றது.

வெளிமாவட்ட மாணவர்களை, தமது படசாலைகளுக்கு ஊடாக, பரீட்சைக்கு தோற்ற அனுமதி வழங்கியதாகவே இவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. மாகாண கல்வி பணிப்பாளர்களால் குறித்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்கள ஆணையாளர் டபிள்யு.எம்.என். ஜே.புஸ்பகுமார தெரிவித்துள்ளார்.

இதேவேளை மாணவர்கள் தமது சொந்த மாவட்டங்களை தவிர்த்து வேறு மாவட்டங்களின் இசெட் புள்ளிகளை பயன்படுத்தி பல்கலைக்கழகத்துக்கு அனுமதி பெறுவதற்கு அனுமதியளிக்கப் போவதில்லை என இன்று கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஸ்ணன் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: