உயர்தர மாணவர்களுக்கு கைக்கணனிகள் வழங்குவது அடிப்படையற்றது!

உயர்தர மாணவர்களுக்கு கைக்கணனி (Tab) வழங்குவது விஞ்ஞான ரீதியில் அடிப்படையற்றது என ஜாதிக ஹெல உறுமய கட்சியின் தேசிய அமைப்பாளர் நிசாந்த சிறி வர்னசிங்க தெரிவித்துள்ளார்.
கொழும்பில் அமைந்துள்ள கட்சியின் தலைமைக் காரியாலயத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இவ்வாறு தெரிவித்தள்ளார்.
அவர் மேலும் கூறுகையில், அடுத்த அண்டு வரவு செலவுத் திட்ட யோசனையில் உயர் தர மாணவர்களுக்கு கைக்கணனி வழங்குவது குறித்து அரசாங்கம் யோசனை சமர்ப்பித்துள்ளது. கைக்கணனி வழங்கும் திட்டம் குறித்து கல்வியியலாளர்களின் ஆலோசனை பெற்றுக்கொள்ளப் படவில்லை. கட்டடங்கள் மற்றும் பௌதீக வளங்களைக் கொண்டு கல்வியை மேம்படுத்த முடியாது.
எவ்வாறாயினும், அரசாங்கம் நாட்டின் அனைத்து பாடசாலைகளையும் அபிவிருத்தி செய்வதில் சிரத்தைக் காட்ட வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார். அரசாங்கம் புத்தாக்க பொருளாதாரம் தொடர்பில் பேசினாலும் அதற்கான நடவடிக்கைகள் எதனையும் எடுக்கவில்லை என அவர் குற்றம் சுமத்தியுள்ளார்
Related posts:
|
|