உயர்தர பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது -. பெறுபேறுகளை ஓகஸ்ட் நடுப்பகுதிக்குள் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவிப்பு!

கல்வி பொது தராதர உயர்தர பரீட்சையின் விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகள் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன.
இதற்கமைவாக, 2021 ஆம் ஆண்டிற்கான க.பொ.த உயர்தர பரீட்சையின் பெறுபேறுகளை இம்மாத இறுதியில் அல்லது ஓகஸ்ட் மாதத்தின் முதல் 2 வாரங்களுக்குள் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் L.M.D. தர்மசேன தெரிவித்துள்ளார்.
2021 ஆம் ஆண்டிற்கான க.பொ.த. உயர்தர பொறியியல் தொழில்நுட்ப பிரயோக பரீட்சைகள் தற்போது இடம்பெற்று வருகின்றன. பிரயோக பரீட்சைகள் எதிர்வரும் 10 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்
இதனிடையே, எரிபொருள் நெருக்கடியால் கல்வி பொது தராதர சாதாரண தர பரீட்சையின் விடைத்தாள் மதிப்பீட்டுப் பணியின் இரண்டாம் கட்ட நடவடிக்கைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன.
இந்நிலையில், முதற்கட்ட விடைத்தாள் மதிப்பீட்டு நடவடிக்கைகள் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளதாக அவர் கூறினார். பல்வேறு சவால்களுக்கு மத்தியிலேயே விடைத்தாள் திருத்தும் பணிகள் முன்னெடுக்கப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை க.பொ.த உயர் தரப்பரீட்சை 2021 பொறியியல் தொழில்நுட்பவியல் பாடத்தின் செய்முறை பரீட்சை பாட இலக்கம் (65) க்கான செய்முறைப் பரீட்சை 29 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டு எதிர்வரும் ஜூலை மாதம் 9ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளதாக இலங்கை பரீட்சை ஆணையாளர் நாயகம் எம் ஜீவராணி புனிதா தெரிவித்துள்ளார்.
இலங்கை முழுவதும் 44 பரீட்சை நிலையங்களில் குறித்த செய்முறைப் பரீட்சையை ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில், வடமாகாணத்தில் யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரி புத்தூர் சோமஸ்கந்த மற்றும் வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலயத்தில் குறித்த செய்முறைப் பரீட்சைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
|
|