உத்தேச இலங்கை மின்சார சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்தை ஜூன் 6 ஆம் திகதி நடத்துவதற்கு தீர்மானம்!

எதிர்வரும் ஜூன் மாதம் 6ஆம் திகதி, உத்தேச இலங்கை மின்சார சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்தை நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் இன்று (30) இடம்பெற்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்தின் போது, இந்தத் தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.
உத்தேச மின்சாரத்துறை மறுசீரமைப்புகளை உள்ளடக்கிய இலங்கை மின்சார சட்டமூலத்தை, வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர கடந்த மாதம் 25ஆம் திகதி நாடாளுமன்றில் முன்வைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
இனி குறைந்த செலவில் மின்சாரம் கிடைக்கும்.!
தபால் மூலம் வாக்களிப்பு: அடையாள அட்டையை சமர்பித்தல் அவசியம் -- தேர்தல்கள் ஆணைக்குழு!
நிபந்தனைகளை மீள்பரிசீலனை செய்யுங்கள் - மின் நெருக்கடி தொடர்பில் மின்சக்தி அமைச்சருக்கு ஜனாதிபதி கோட்...
|
|