உதவி செய்யச் சென்றவரை தாக்கி உடமைகளை பறித்த கும்பல் !
Wednesday, May 9th, 2018
உதவி செய்யச் சென்றவர் தாக்குதலுக்கு இலக்கானதுடன் உடமைகளையும் பறிகொடுத்த சம்பவம் கேரதீவு அறுகுவெளிப் பகுதியில் இடம்பெற்றது.
இதே இடத்தைச் சேர்ந்த தேவராசா தவரூபன் (வயது 31) என்னும் குடும்பஸ்தரே தாக்குதலால் பாதிக்கப்பட்ட நிலையில் சாவகச்சேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது:
தனது காணியில் தேங்காய் பிடுங்கிக் கொண்டு தனன் களப்பில் உள்ள தாயார் வீட்டுக்கு மோட்டார் சைக்கிளில் சென்றபோது ஏ32 சாலையில் மோட்டார் சைக்கிள்களுடன் நின்ற நால்வர் மோட்டார் சைக்கிள் பழுதடைந்து விட்டது.
அருகில் ஏதும் மோட்டார் சைக்கிள் திருத்தும் கடை உள்ளதா எனக் கேட்டுள்ளனர். இதற்கு அவர் தனது தொலைபேசி மூலம் அப் பகுதியில் மோட்டார் சைக்கிள் திருத்தும் கடை வைத்துள்ள ஒருவருக்குத் தகவல் வழங்கியுள்ளார்.
இந்த நிலையில் குடும்பத்தரை உதவி கேட்ட நால்வரும் அங்கு காணப்பட்ட பொல்லுகளால் தாக்கிவிட்டு அவரது மேல் சட்டையில் காணப்பட்ட மோட்டார் சைக்கிள் ஆவணங்கள் மற்றும் தன்னியக்க பண அட்டை ஆகியவற்றை அபகரித்துக்கொண்டு தப்பிச் சென்றுள்ளனர்.
இவர் அழைப்பு ஏற்படுத்திய மோட்டார் சைக்கிள் திருத்துபவர் அங்கு சென்றபோது தாக்குதலுக்கு இலக்கான நிலையில் காணப்பட்ட இவரை சாவகச்சேரி மருத்துவமனையில் சேர்ப்பித்தார் எனத் தெரிவிக்கப்பட்டது.
Related posts:
|
|