உதவிப் பணிப்பாளர்கள், ஆலோசகர்கள் 15 வருடங்களாக ஒரே வலையத்தில் என சுட்டிக்காட்டு!

Thursday, October 26th, 2017

வடக்கு மாகாணக் கல்வித் திணைக்களத்தின் கீழ் உள்ள செயலாளர் முதல் ஆசிரியர்கள் வரையான சகலருக்கும் இடம்மாற்றம் வழங்கப்படும் நிலையில் ஆசிரிய ஆலோசகர்கள் மற்றும் உதவிக் கல்விப பணிப்பாளர்கள் மட்டும் 15 வருடங்கள் தொடக்கம் 20 வருடங்கள் வரைக்கும் ஒரே வலையத்துக்குள் பணிபுரிகின்றனர் என்று சுட்டிக்காட்டப்படுகின்றது.

வடக்கு மாகாணத்தின் 12 கல்வி வலையங்களின் அலுவலகங்களிலும் பணிபுரியும் ஊழியர்கள் தொடக்கம் கல்வி அமைச்சின் செயலாளர் அதிபர்கள் ஆசிரியர்கள் என அனைவருக்குமே உச்ச பட்சமாக 7 வருடங்களுக்கு ஒரு முறை கட்டாய இடமாற்றம் நடை முறையில் உள்ளது.

ஆசிரிய ஆலோசகர்களுக்கும் உதவிக்கல்விப் பணிப்பாளர்களுக்கும் இடமாற்றங்கள் வழங்கப்படுவதில்லை. இதனால் வடக்கு மாகாணத்தில் சுமார் 150 ஆசிரிய ஆலோசகர்களும் 50க்கும் மேற்பட்ட உதவிக் கல்விப்பணிப்பாளர்களும் தொடர்ந்தும் ஒரே கல்வி வலையத்துக்குள் நீண்டகாலமாகப் பணிபுரிகின்றனர் என்று சுட்டிக்காட்டப்படுகிறது.

இதில் பலர் 16 ஆண்டுகளையும் தாண்டி 20 ஆண்டுகள் வரை ஒரே இடத்தில் பணிபுரிகின்றனர் என்று தெரிவிக்கப்படுகிறது. உண்மையில் சகல அரச ஊழியர்களுக்கும் குறிப்பிட்ட கால எல்லையில் சுழற்சி முறையிலான இடமாற்றம் வழங்கப்படவேண்டும்.

இந்த இரண்டு பதவிகளுக்குமான தனியான சேவையின்மை காரணமாக இதுவரை இவ்வாறான இடமாற்றங்கள் வழங்கப்படவில்லை. தற்போது ஆசிரிய ஆலோசகர் சேவை உருவாக்கம் இடம்பெறுகிறது. மேற்குறிப்பிட்டவர்களுக்கும் விரைவில் இடமாற்றம் நடைமுறைப்படுத்தப்படும் என்று வடக்கு மாகாணக் கல்வி அமைச்சின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Related posts: