உதயங்க வீரதுங்கவுக்கு இன்டர்போல் பிடியாணை!

Monday, September 26th, 2016

இலங்கை விமானப்படைக்கு மிக் விமானம் கொள்வனவில் ரஷ்யாவுக்கான முன்னாள் இலங்கை தூதுவர் உதயங்க வீரதுங்க நேரடியாக தொடர்புபட்டிருந்தாக தெரிவித்து நிதி மோசடி விசாரனைப் பிரிவு கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் தொடுத்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

யுக்ரேனில் அவர் வசித்துவரும் வீட்டுக்கு வெளிவிவகார அமைச்சு மூலம் அழைப்பாணை அனுப்பினாலும் அவர் குறித்த வீட்டில் இல்லை என யுக்ரேன் அதிகாரிகள் தெரிவித்ததாக நீதிமன்றுக்கு அறிவிக்கப்பட்டது.

சர்வதேச பொலிஸார் மூலம் உதயங்க வீரதுங்கவை கைது செய்ய பிடியாணை பிறப்பிக்குமாறு இதன்போது நிதி மோசடி விசாரனைப் பிரிவு நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுத்தது.அவருக்கு பிடியாணை பிறப்பிப்பதா இல்லையா என எதிர்வரும் 30 ஆம் திகதி தீர்மானிப்பதாக கொழும்பு கோட்டை நீதவான் இதன்போது தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

udayanga-weeratunga-450x299

Related posts: