உணவு கையாளும் நிலையத்தில் வெற்றிலை மென்று ஜம்பருடன் நின்றவருக்கு ரூபா 3 ஆயிரம் தண்டம்!
Friday, May 4th, 2018வெற்றிலை மென்றவாறு ஜம்பருடன் பணியாற்றிய சிப்பந்திக்கு 3 ஆயிரம் ரூபா தண்டம் விதித்தது நீதிமன்று.
சாவகச்சேரி, கொடிகாமம் பகுதிகளில் உள்ள சுகாதாரச் சீர்கேடான இடங்களில் சுகாதாரப் பிரிவினர் திடீர் சோதனைகளை அண்மையில் முன்னெடுத்திருந்தனர்.
அந்தச் சோதனை நடவடிக்கையில் கொடிகாமம் பகுதியில் இயங்கி உணவு கையாளும் நிலையம் ஒன்றில் வெற்றிலை மென்றவாறு ஜம்பருடன் பணியாற்றினார் என்று குற்றஞ்சாட்டப்பட்டு பணியாளர் ஒருவருக்கு எதிராக சுகாதாரப் பிரிவினர் யாழ்ப்பாணம், சாவகச்சேரி நீதிவான் மன்றில் வழக்குத் தாக்கல் செய்தனர்.
அந்த வழக்கு நேற்றுமுன்தினம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. வழக்கு விசாரணைகளின் போது பணியாளர் குற்றத்தை ஒப்புக் கொண்டார். இதனை அடுத்து அவருக்கு 3 ஆயிரம் ரூபா தண்டம் செலுத்துமாறு நீதிவான் மன்று உத்தரவிட்டது.
Related posts:
புத்தாண்டு சுபநேர பத்திரம் – இராஜாங்க அமைச்சர் விதுர விக்கிரமநாயக்கவினால் ஜனாதிபதியிடம் கையளிப்பு !
எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பல் விவகாரம்: குற்றவியல் விசாரணைத் திணைக்களத்தின் அறிக்கையின்படி அனைத்துத் தகவல...
கல்விக்காக ஒதுக்கப்படும் நிதியை அதிகரிக்க வேண்டும் - விசேட நாடாளுமன்ற தெரிவுக்குழு பரிந்துரை!
|
|