உணவுப் பொதியின்  விலை அதிகரிப்பு!

Monday, February 6th, 2017

நாட்டில் அண்மையில் 10 ரூபாவினால் அதிகரிக்கப்பட்ட உணவுப்பொதி ஒன்றின் விலை மேலும் 10 அல்லது 15 ரூபாவினால் அதிகரிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேங்காயின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளமையே உணவுப்பொதிகளின் விலையும் அதிகரிப்பதற்கு தீர்மானித்துள்ளதாக இலங்கை உணவக உரிமையாளர் சங்கத்தின் தலைவர் அசேல சம்பத் தெரிவித்துள்ளார். அத்துடன், நாட்டில் தற்போது தேங்காய் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதோடு, தேங்காய் ஏற்றுமதியை உடனடி​யாக நிறுத்த வேண்டும் எனவும் தெரிவித்தார்.

மேலும், அரசாங்க நிறுவனங்களின் ஊழியர்களுக்கு உணவுப் பொதியொன்றினை, 50 ரூபாவுக்கு வழங்க முடியாத நிலைமைக்கு தாம் தள்ளப்பட்டுள்ளதாகவும் அசேல சம்பத் குறிப்பிட்டுள்ளார்.

FotorCreated-479

Related posts: