உணவில் குறைந்த அளவு உப்பு சேர்த்தால் மாரடைப்பு ஏற்படும் !

Tuesday, March 7th, 2017

உணவில் குறைந்த அளவு உப்பு சேர்த்தால் மாரடைப்பு அபாயம் ஏற்படும் என்ற அதிர்ச்சி தகவலை கனடாவில் உள்ள மெக்மாஸ்பர் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் சலீம்யூசுப் தெரிவித்துள்ளார்.

நாள் ஒன்றுக்கு 5 கிராம் உப்பை உணவில் பயன்படுத்தினால் உடல் நலம் மேம்படும் என உலக சுகாதார நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது. ஆனால் இந்த அளவு போதியதல்ல.

உணவில் இன்னும் கூடுதலாக உப்பு சேர்த்துக்கொள்ள வேண்டும் என கனடாவில் உள்ள மெக்மாஸ்பர் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் சலீம்யூசுப் தெரிவித்துள்ளார்.

நாள் ஒன்றுக்கு 3 கிராம் சோடியம் உடலில் கலக்க வேண்டும், அதற்கு குறைந்தால் மாரடைப்பு ஏற்பட்டு இதயத்தின் செயல்பாடுகள் நின்று உயிரிழக்கும் அபாயம் ஏற்படும் என்றும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.

நாள் ஒன்றுக்கு 7.5 முதல் 12.5 கிராம் உப்பு எடுத்தால் தான் 3 அல்லது 5 கிராம் சோடியம் பெற முடியும். எனவே 5 கிராம் உப்பு போதாது. எனவே கூடுதல் அளவில் உப்பு சேர்க்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

அது குறித்து விளக்கங்களை ஐரோப்பிய இதய ஜேர்னல் பத்திரிகையில் அவர் வெளியிட்டுள்ளார். அதே நேரத்தில் அளவுக்கு அதிகமாக உப்பு சேர்த்தால் உடல் நலம் பாதிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts: