உணவகத்தை ஒரு மாதத்துக்கு மூடுமாறு உத்தரவு!

Saturday, December 8th, 2018

சாவகச்சேரி நகரப்பகுதியில் மூன்று உணவகங்கள், மற்றும் உணவு உற்பத்தி நிலையம் ஆகியவற்றில் காணப்பட்ட குறைபாடுகளை பரிசோதித்த பொதுச்சுகாதார பரிசோதகரால் பரிசீலிக்கப்பட்டபோது அவ்வாறான குறைபாடுகளை நிவர்த்தி செய்யயுமாறு உணவகங்களுக்கு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டது.

மேற்படி உணவகங்கள் இந்த அறிவுறுத்தலை கவனத்திற்கொண்டு அதனை சீர்செய்யாது தொடர்ந்து இயங்கி வந்ததால் பரிசோதகரால் வழக்கு தாக்கல் செய்யப்பட்டு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

சுகாதார திணைக்களத்தால் வழங்கப்பட்ட அறிவுறுத்தலகளை ஒருமாதத்திற்குள் நிறைவேற்றப்பட்டதா என்பதை ஆராய்ந்த நீதவான்  குறித்த உணவகங்களின் உரிமையாளர்கள் அவ்வாறு கருத்தில் கொள்ளாததால் இரண்டு உணவகங்களின் உரிமையாளருக்கு தலா ஆயிரம் ரூபா தண்டம் விதித்தார். மற்றுமோர் உணவகத்துக்கு மூன்றுநாட்கள் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

Related posts: