உடுவில் கல்விக் கோட்டத்துக்குட்பட்ட 120 புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்கள் கெளரவிப்பு!

யாழ். சுன்னாகம் லயன்ஸ் கழகத்தின் ஏற்பாட்டில் உடுவில் கல்விக் கோட்டத்துக்குட்பட்ட பாடசாலைகளில் தரம் – 5 புலமைப்பரிசில் பரீட்சையில் 145 புள்ளிகளுக்கு மேல் பெற்றுச் சித்தியடைந்த 120 மாணவர்கள் கௌரவிக்கப்படவுள்ளனர்.
நாளை மறுதினம் வெள்ளிக்கிழமை(04) பிற்பகல் 2.30 மணிக்கு மருதனார்மடம் இராமநாதன் கல்லூரியில் இடம்பெறவுள்ள மேற்படி நிகழ்வுக்கு, சுன்னாகம் லயன்ஸ் கழகத் தலைவர் லயன் நா.தயாரூபன் தலைமை தாங்கவுள்ளார்.
இந்த நிகழ்வுக்கு லயன்ஸ் கழகத்தின் முதலாவது உப மாவட்ட ஆளுநர் லயன் கமிலஸ் பெர்னாண்டோ லயன் சீமாட்டி பத்மினி தம்பதிகள் பிரதம விருந்தினர்களாகவும், இரண்டாவது உப மாவட்ட ஆளுநர் லயன் தேவாபீற்றர் லயன் சீமாட்டி ஜசிந்தா தம்பதிகளுடன் உடுவில் கோட்டக் கல்விப் பணிப்பாளரும் தெல்லிப்பழைத் தமிழ்ச் சங்கத் தலைவருமாகிய ச.சிவானந்தராசா, ஓய்வுநிலை உடுவில் கோட்டக் கல்விப் பணிப்பாளர் சு.சண்முககுலகுமார் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகவும் கலந்து கொள்ளவுள்ளனர்.
Related posts:
|
|