உடுவில் ஆலடியில் 17 வயது சிறுவன் உயிரிழப்பு!

Thursday, November 30th, 2017

துவிச்சக்கரவண்டியும் மோட்டார் சைக்கிளும் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் மோட்டார் சைக்கிளில் சென்ற சிறுவன் படுகாயமடைந்து யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளதாக மானிப்பாய் பொலிஸார் தெரிவித்தனர்.

துவிச்சக்கரவண்டியை செலுத்தி சென்ற பெண்ணும் காயங்களுக்குள்ளான நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இவ் விபத்தில் உயிரிழந்த சிறுவன் மானிப்பாய் வீதி உடுவில் பகுதியைச் சேர்ந்த ஏ.டியான்சோ அடன் (வயது – 17) என பொலிஸார் தெரிவித்தனர். சடலம் உடற்கூற்றுப் பரிசோதனைக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை மானிப்பாய் போக்குவரத்து பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts: