உடற்பாகங்களை கொண்டு சென்றவர்களுக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை!
Wednesday, October 5th, 2016வசீம் தாஜூடினின் உடற்பாகங்களை மாலபே தனியார் மருத்துவ கல்லூரியிற்கு அனுப்புவதில் பங்கு கொண்ட அனைவருக்கும் எதிராக சட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
இலங்கை மருத்துவ சங்கத்தின் அறிக்கையையே தற்போது நாம் எதிர்பார்த்துக் கொண்டிருப்பதாக அவர் தெரிவித்துள்ளார். நேற்று இடம் பெற்ற நாடாளுமன்ற ஒன்று கூடலின் போதே சுகாதார அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
தாஜூடினின் உடற்பாகங்கள் எவ்வாறு மாலபே தனியார் மருத்துவ கல்லூரிக்கு கொண்டு செல்லப்பட்டது என்பது தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும் என இலங்கை மருத்துவ சங்கம் குறிப்பிட்டுள்ளது.இவ்வாறு தாஜூடினின் உடற்பாகங்கள் மாலபே தனியார் மருத்துவ கல்லூரிக்கு அனுப்பி வைக்கப்பட்டமை சட்டத்திற்கு புறம்பான செயலாகும்,
இதற்கு பதிலாக கொழும்பில் உள்ள சட்ட வைத்திய அதிகாரியின் அலுவலகத்திற்கே அனுப்பி வைத்திருக்க வேண்டும் என ஜே.வி.பியின் களுத்துறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
இதேவேளை,மாலபே தனியார் மருத்துவ கல்லூரியிலிருந்து 26 உடல் பாகங்கள் மீட்கப்பட்டதாகவும் அது தாஜூடினின் என சந்தேகம் எழுந்திருந்த நிலையில், மாலபே தனியார் மருத்துவ கல்லூரியில் தாஜூடினின் உடற்பாகங்களே இல்லை என கல்லூரியின் தலைவர் நிவில் பெர்ணான்டோ தெரிவித்திருந்தார்.
Related posts:
|
|