உடற்கல்வி டிப்ளோமா நியமனத்தை  தரம் 3 க்குள் உள்வாங்கவும்

Sunday, November 26th, 2017

உடற்கல்வி டிப்ளோமா நியமனம் பெற்று பின்னர் தொண்டர் ஆசிரியர்களாக இணைந்து நிரந்தர நியமனம் பெற்றவர்களை வகுப்பு 3 இல் தரம் 1(இ) க்குள் உள்வாங்குமாறு கோரப்பட்டுள்ளது.

இது தொடர்பில் வடக்கு மாகாண உடற்கல்வி டிப்ளோமா ஆசிரிய சங்கத் தலைவர் ப.தர்மகுமாரன் தெரிவித்ததாவது;

உடற்கல்வி டிப்ளோமா பட்டத்தைப் பெற்றவர்களைப் புதிய சுற்றறிக்கையின்படி வகுப்பு 3 இல் தரம் 1(இ) க்குள் உள்வாங்க வேண்டும். அவர்களை உள்வாங்க அரசின் சுற்றறிக்கை கிடைக்கவில்லை என்று வடக்கு மாகாணக் கல்வி அமைச்சுக் கூறுகிறது. கல்வி அமைச்சிடம் சென்றால் அதனை மாகாணசபை செய்யும் என்று கூறுகிறது. அதனால் இது தொடர்பில் வடக்குமாகாணக் கல்வி அமைச்சுக்கு கடிதம் மூலமாக அறிவிக்கப்படவுள்ளது என்றார்.

Related posts: