உக்கிரமடைந்து வரும் ஹமாஸ் – இஸ்ரேல் மோதல் – தீர்வு காண உலகளாவியஒற்றுமை அவசியம் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வலியுறுத்து!

Sunday, October 15th, 2023

உக்கிரமடைந்து வரும் ஹமாஸ்-இஸ்ரேல் மோதலுக்கு தீர்வு காண உலகளாவியஒற்றுமையின் அவசியத்தை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வலியுறுத்தினார்.

இந்து சமுத்திரத்தில் நிபுணத்துவம் பெற்ற சர்வதேச ஆராய்ச்சி நிறுவனமான GeopoliticalCartographer கொழும்பு சிட்டி சென்டரில் ஏற்பாடு செய்திருந்த மாநாட்டிலேயே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

ஹமாஸ் மற்றும் இஸ்ரேலுக்கு இடையிலான மோதல் நிலைமை குறித்து கருத்து தெரிவித்த ஜனாதிபதி, அதன் தற்போதைய போக்குகள் உலகளாவிய ரீதியில் ஏற்படுத்தியுள்ள தாக்கம் குறித்தும் விளக்கமளித்தார்.

பல்வேறு நாடுகள் மற்றும் அமைப்புகளின் கண்டனத்திற்கு ஆளாகியுள்ள நிலையிலும்,

மில்லியனுக்கும் அதிகமான மக்களை காசாவின் தெற்குப் பகுதிச் செல்லுமாறு இஸ்ரேல்விடுத்துள்ள கோரிக்கை உள்ளிட்ட அண்மைக்கால நிலைமைகள் தொடர்பில் ஜனாதிபதிவிளக்கமளித்தார்.

மத்திய கிழக்கு நாடுகளும் மற்றைய முஸ்லிம் நாடுகளும் இஸ்ரேலின் நடவடிக்கைகளுக்கு கண்டனம் தெரிவித்துள்ளன.  இஸ்ரேல் தான் பாதிக்கப்பட்டுள்ளது என்றும் பலர் கூறினர்.

எவ்வாறாயினும் தாக்குதல்கள் தற்போது முடிவுக்கு வந்துள்ளன. மேலும் அமெரிக்க இராஜாங்க செயலாளர் ஆண்டனி பிளிங்கன் இஸ்ரேலுக்குச் சென்றுள்ளார்.

அமெரிக்கா தனது நிலைப்பாட்டை அறிவித்துள்ளது. காசா பகுதியின் வடக்குப் பகுதியில் வசிக்கும் மில்லியனுக்கும் அதிகமான மக்களை காசாவின் தெற்குப் பகுதிக்கு உடனடியாக செல்லுமாறு இஸ்ரேல் கோரியுள்ளது.

அதற்காக ஐக்கிய நாடுகள் சபையும் ஆபிரிக்க நாடுகள் சிலவும், ஐரோப்பிய நாடுகளும் கண்டனம் தெரிவித்துள்ளன.

“அடுத்து என்ன நடக்கப் போகிறது? காஸாவில் வசிப்பவர்களை வெளியேறச் கோருவதால், இஸ்ரேல் காஸாவுக்குள் நுழையப் போகிறது என்றே தெரிகிறது. காசா பகுதியில் இருந்து மக்கள் ஏன் வெளியேற்றப்பட்டனர்? காசா பகுதியில் ஏன் குண்டு வீசப்பட்டது? அது ஏதேவொரு நோக்கத்துடன் செய்யப்பட்ட விடயமாகும்.

இஸ்ரேலின் இந்த செயற்பாடு வீண்செயலாக இருக்க முடியாது என நான் கருதுகிறேன். காசாவின் கட்டிடங்கள் மீது குண்டுவீசி ஹமாஸ் போராளிகள் மறைந்திருக்கும் இடங்களை அழிக்க வேண்டும் என்பதே முதல் அத்தியாயம் என்று அவர்கள் கருதினர்.

காசாவிற்குச் ஹமாஸ் அமைப்பினரை தேடிப்பிடுத்து சண்டையிட்டால் மற்றுமொரு பிரச்சினை ஏற்படும். இஸ்ரேல் அவ்வாறு செய்யும் போது ஹமாஸ் பயங்கரவாதிகள் இஸ்ரேல் மீது படையெடுத்தால் நிலைமை பாரதூரமாகிவிடும். இன அழிப்பை விடவும் மோசமான நிலைமை ஏற்படக்கூடும். உக்ரைன், தாய்வான், மத்திய கிழக்கு மற்றும் காசா எல்லைப் பகுதிகளில் ஏற்பட்டுள்ள

இதேநேரம் மோதல்களை கட்டுப்படுத்த முடியுமென நான் நினைக்கவில்லை. மத்திய தரைக்கடலில் விமானம் தாங்கிய போர்க்கப்பல்களுடன் கூடிய இரு படைப்பிரிவுகள் செயற்படுமானால் அது பாரதூரமான நிலைமையாகும். அதனால் ஏற்படப்போதும் அளவுகடந்த பிரச்சினைகளின் விளைவாக நிலைமையை முகாமைத்துவம் செய்ய முடியாத நிலைமை ஏற்படும்.

“நான் ஹமாஸ் – ஹிஸ்புல்லா அமைப்புக்களை ஆதரிக்கவில்லை. நிலைமை எவ்வாறு மாறப்போகிறது என்பது குறித்து அவதானம் செலுத்த வேண்டும். காசா பகுதி அழிக்கப்பட்டுள்ளது. அதில் பகுதியளவான நிகழ்வுகள் மாத்திரமே பாலஸ்தீனத்தில் இடம்பெறுகின்றன.

லெபனனிலும் அதுவே நடக்கிறது. அதனால் தீர்வுக்குச் செல்வதாயின் நான்கு நாடுகள் முன்வர வேண்டியது அவசியமாகும்.

சிரியாவை பற்றியும் சிந்திக்க வேண்டும் என்பதால் பழைய பாதையில் சென்று தீர்வைத் தேட முடியாது. புதிதாக சிந்திக்க வேண்டும் என ஜனாதிபதி தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

000

Related posts:


கொரோனா தொற்றுறுதியான நாடாளுமன்ற உறுப்பினர்களுன் தொடர்புடையவர்களைத் தேடி நாடாளுமன்ற சிசிவிவி காணொளி ப...
24 மணித்தியாலங்கள் தொடர்ச்சியான காய்ச்சல் காணப்படுமாயின் வைத்திய ஆலோசனையை நாடுங்கள் - தேசிய டெங்க...
குற்றவியல் நீதிமன்றங்களில் உள்ள மொத்த வழக்குகளில் 33 வீதமானவை சிறுவர் துஷ்பிரயோகங்கள் மற்றும் பாலியல...