இ.போ.ச. வுக்கு விரைவில் இரண்டாயிரம் புதிய பஸ்கள்!

இ.போ.ச வுக்கு 2,000 புதிய பஸ்களை சேவையில் ஈடுபடுத்துவது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது.
இது தொடர்பாக வெளிநாட்டு முதலீட்டாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படுவதாக போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் பிரதி அமைச்சர் அசோக் அபேசிங்க தெரிவித்தார்.
பொது மக்களுக்கு சிறப்பான போக்குவரத்துச் சேவையை வழங்குவதே அரசாங்கத்தின் நோக்கமெனவும் அவர் தெரிவித்துள்ளார். அரசாங்கத்தின் நிதியை பயன்படுத்தாது அதற்கு தேவையான நடவடிக்கையை மேற்கொள்வதே தமது நோக்கமாகும் எனவும் அவர் கூறினார்.
பஸ்களுக்கு 500 சி.சி. இயந்திரங்களை (என்ஜின்) பொருத்தும் நடவடிக்கையை முன்னெடுத்திருப்பதாகவும் பிரதி அமைச்சர் தெரிவித்தார்.
Related posts:
யாழ்.மாவட்டச் செயலகத்தில் வருடத்தின் முதல் நாள் வேலையை ஆரம்பிக்கும் நிகழ்வு !
சிறைச்சாலை தொற்றாளர்களுக்கு விசேட சிகிச்சை மையம் - இராணுவத் தளபதி தெரிவிப்பு!
வருடத்திற்கு 5 ஆயிரம் மில்லியன் டொலருக்கு எண்ணெய் இறக்குமதி செய்யும் நாடு ஏன் பல புதுப்பிக்கத்தக்க ஆ...
|
|