இவரைக் கண்டால் அறிவிக்கவும்!

பல நிறுவனங்களிடம் பெருந்தொகையான அலைபேசிகளைக் கொள்வனவு செய்து, அதற்குக் காசோலை கொடுத்து மோசடி செய்த குற்றத்துடன் தொடர்புடைய இப்படத்தில் காணும் யுவதியைக் கண்டால் தகவல் தருமாறு, பொலிஸ் தலைமையகம் பொது மக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது.
மனுவங்கொட மாவட்ட நீதவான் நீதிமன்றத்தில், தொடுக்கப்பட்ட வழக்குடன் தொடர்புடைய யுவதியே இவ்வாறு தேடப்பட்டு வருகின்றார்.
சந்தேகநபரான குறித்த யுவதி, சுமார் 3,264,740 ரூபாயை மோசடி செய்துள்ளாரெனப் பொலிஸார் தெரிவித்தனர்.
யுவதியின் விவரம்:
பெயர் – எம்.எம்.லக்மாலி பிரியதர்ஷனி
தே.அ.இ.- 915502717V
பிறந்த திகதி- 1991.02.19
கடவுச்சீட்டு இல.-N.5627745
முகவரி 1-இல. 141 பண்டாரநாயகபுர, மல்கட்டுவாவ, குருநாகல்
முகவரி 2- இல. 2/A 12,பிக்சிட், பில்வத்த, யடியன.
குறித்த சந்தேகநபரைக் கண்டால் 077-3890959,077-3741661 என்ற அலைபேசி இலக்கங்களுக்குத் தொடர்புகொண்டு தகவல் வழங்குமாறு, பொலிஸ் தலைமையகம் பொது மக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது.
Related posts:
|
|