இழுவைமடி தொழிலில் தமிழக மீனவர்கள் ஈடுபட்டால் நாமும் செய்வோம் – என். எம்.ஆலம்!

Friday, December 9th, 2016

தமிழக மீனவர்கள் இலங்கை கடற்பரப்பில்  இழுவைமடி தொழிலில் ஈடுபடும் நிலையில் எமது கடற்பரப்பில்  நாம்  அதே  தொழிலில் ஈடுபட்டுவதற்கு எதற்காக  தயங்க வேண்டும் என வட பகுதி மீனவர்கள் கேள்வி எழுப்புவதாக  மன்னார் மாவட்ட மீனவ கூட்டுறவுச் சங்க சமாசத்தின்  தலைவர்  என். எம்.ஆலம் தெரிவித்துள்ளார்.

இலங்கை கடற்பரப்பில் இழுவைமடி தொழிலில் ஈடுபடும் தமிழக மீனவர்கள் தொடர்பாக நடவடிக்கை எடுக்காது, சொந்த கடலில்  தொழில்  செய்யும் வட பகுதி மீனவர்களிடம் எவ்வாறு இந்த  தொழிலில் ஈடுபட வேண்டாம் என   கூறுவது எனவும் கேள்வியெழுப்பியுள்ளார்.

வட பகுதி கடல் வளங்களை பாதுகாத்தல் மற்றும் வட  மாகாண மீனவர்கள்  எதிர்கொள்ளும் பிரச்சனைகளை இனம் கண்டு வெளிப்படுத்தும் நோக்கில்  ஒழுங்கமைக்கப்பட்டுள்ள வட மாகாண மீன்பிடி அபிவிருத்திக்கான இணைய முகாமைத்துவ செயற்பாட்டின் ஆரம்ப நிகழ்வு நேற்றைய தினம் இடம்பெற்றது.

இந்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

எனினும் இந்திய, இலங்கை மீனவர்கள் பிரச்சனைகள் தொடர்பாக இம்முறை இடம்பெற்ற பேச்சுவார்த்தையில் இலங்கை கடற்பரப்பில் இழுவைமடி தொழிலில் ஈடுபடுவதை தவிற்குமாறு  தமிழக மீனவர்களிடம்   கேட்டுக்கொண்டதாகவும் மன்னார் மாவட்ட மீனவ கூட்டுறவுச் சங்க சமாசத்தின்  தலைவர்  என். எம்.ஆலம் தெரிவித்தார்.

அதற்கு மறுப்பு தெரிவித்த  தமிழக மீனவர்கள் இந்திய  அரசாங்கத்தினால்  இலங்கைக்கு உதவிகள் வழங்கப்படுவதாக சுட்டிக்காட்டியதாகவும் என். எம்.ஆலம் குறிப்பிட்டார்.

f0a3522f-7538-407b-a1fc-b6e4be8fc16b-720x480

Related posts: