இளைஞர் மீது சரமாரியாக வாள்வெட்டு – மீசாலையில் சம்பவம்!

Tuesday, December 5th, 2017

மீசாலை பகுதியில் இளைஞர் ஒருவர் மீது இனம்தெரியாத நபர்கள் சரமாரியாக வாள் வெட்டு தாக்குதல் நடத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த சம்பவம் இரவு 8 மணியளவில் இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் படுகாயமடைந்த நிலையில், நபர் ஒருவர் சாவகச்சேரி ஆதார வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில, சம்பவம் தொடர்பில் சாவகச்சேரி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இதேவேளை, கடந்த காலங்களில் யாழ்ப்பாணத்தில் வாள்வெட்டு சம்பவங்கள் வெகுவாக அதிகரித்திருந்த நிலையில், சம்பவத்துடன் தொடர்புடைய பலர் கைது செய்யப்பட்டிருந்தனர்

குறிப்பாக ஆவா குழு உறுப்பினர்கள் பலர் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டு வரும் நிலையில், வாள் வெட்டு சம்பவங்கள் குறித்து பல்வேறு தகவல்கள் வெளியாகியிருப்பதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்

இந்த கைது நடவடிக்கைகளை தொடர்ந்து கடந்த சில நாட்களாக யாழ்ப்பாணத்தில் வாள் வெட்டு சம்பவங்கள் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டிருந்த நிலையில், இன்று மீண்டும் இளைஞர் மீது வாள்வெட்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: