இளம் பெண்ணுடன் மதுபோதையில் அங்க சேஷ்டை: இரு ஆசாமிகள் கைது!

Sunday, July 10th, 2016

யாழ்.புத்தூர் வாதரவத்தை வீதியில் தனிமையில் சென்ற இளம் பெண்ணுடன் மதுபோதையில் அங்க சேஷ்டை புரிந்த இருவரை அச்சுவேலிப்  பொலிஸார்  கைது செய்துள்ளனர்.புத்தூர் கிழக்கைச்  சேர்ந்த 35, 39 வயதான இரு ஆசாமிகளே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.  கைது செய்யப்படும் போது குறித்த நபர்கள் போதைப்பொருள் உட்கொண்ட நிலையில் இருந்துள்ளதாகப் பொலிஸார்  தெரிவித்துள்ளனர்.

நேற்றுச் சனிக்கிழமை(09-07-2016) மதியம் இடம்பெற்ற மேற்படி சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, மதுபோதையில் நின்ற குறித்த இருவரும் வர்த்தக நிலையமொன்றுக்குச்  சென்றுவிட்டுத்  தனிமையில் சென்ற பெண் மீது அங்க சேஷ்டையில் ஈடுபட்டுள்ளனர்.

இதனையடுத்து மேற்படி பெண்மணி கூக்குரலிடவே அந்தப்பகுதியில் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்ட இரகசியப்  பொலிஸார் சந்தேகநபர்கள் இருவரையும் கையும் மெய்யுமாகப்  பிடித்துள்ளனர். சந்தேகநபர்கள் இருவர் மீதும் சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது.

Related posts: