இலவச தொழில்பயிற்சி நெறி டிசம்பர் ஆரம்பம்!

Tuesday, November 29th, 2016

தொழிற்சாலையின் ஊடாகவும் பட்டதாரியாகும் வகையில் தொழில்பயிற்சி நெறிகள் நடத்தப்படவுள்ளதாக வவுனியா ஓஹான் நிறுவனம் – மாற்றுவலுவுள்ளவர்களுக்கான புனர்வாழ்வு நிலையம் அறிவித்துள்ளது.

பல்கலைக்கழக அனுமதி கிடைக்கவில்லையே என்று கவலையடைந்துள்ள இளைஞர்களுக்கே இந்த வாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளதாக ஓஹான் நிறுவனத்தினர் தெரிவிக்கின்றனர். தொலைக்காட்சி, வானொலி மற்றும் அவற்றுடன் இணைந்த உபகரணங்களைத் திருத்துவதற்கான பயிற்சி இந்தத் தொழிற்பயிற்சியின் மூலம் வழங்கப்படவுள்ளது. எதிர்வரும் டிசம்பர் மாதம் ஆரம்பமாகவுள்ள இந்த ஒரு வருட கால இலவச தொழில்பயிற்சி நெறியில் கலந்து கொள்ள விரும்புவர்கள் டிசம்பர் மாதம் 10ஆம் திகதிக்கு முன்னர் ஓஹான் தொழிற்பயிற்சி நிலையம், 2ஆம் ஒழுங்கை பாலவிநாயகர் வீதி, தவசிக்குளம் வவுனியா என்ற முகவரிக்கு நேரடியாக வருகை தந்து பதிவு செய்து கொள்ள முடியும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் பயிற்சி நெறிக்கான பதிவுகளை 024 324 4074, 077 734 3531 ஆகிய தொலைபேசி எண்களுடன் தொடர்பு கொண்டு மேற்காள்ள முடியும். இப் பயிற்சியின் மூலம்  NVQ L3 சான்றிதழைப் பெற்றுக்கொள்ள முடியும்.

sittandy nithy (3)

Related posts: