இலவச இணைய சேவை திட்டம் தோல்வி!

தற்போதைய அரசாங்கத்தினால் ஆரம்பித்து வைக்கப்பட்ட இலவச இணைய சேவை திட்டம், தோல்வி அடைந்துள்ளதாக தொலைத்தொடர்பு மற்றும் டிஜிட்டல் உட்கட்டமைப்பு அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
நேற்று முன்தினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கும் பதிலளிக்கும் போதே அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அந்த திட்டத்தை முன்னெடுக்கும் நிறுவனத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப பிரச்சினையே தோல்வியடைய காரணம் என அமைச்சர் கூறியுள்ளார். அந்த திட்டத்தை புதிய முறையில் மீண்டும் செயற்படுத்துவதற்கு கால அவகாசம் தேவைப்படுகிறது.
100 நாள் வேலைத்திட்டத்தின் கீழ் பொது இடங்களில் இலங்கையர்களுக்கும் இலவச WiFi வசதி வழங்குவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தேர்தல் வாக்குறுதி அளித்திருந்தார்.அந்த திட்டம் 2015ஆம் ஆண்டு மார்ச் மாதம் 30ஆம் திகதி கோட்டை ரயில் நிலையத்தில் இருந்து ஆரம்பித்து வைக்கப்பட்டிருந்தன.
Related posts:
|
|