இலஞ்ச, ஊழல் ஆணைக்குழுவின் மனு மீளாய்வு விசாரணைக்கு!

Tuesday, September 20th, 2016

எவன்காட் நிறுவனத்தின் தலைவர் நிஸங்க சேனாதிபதி மற்றும் ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் பாலித பெர்ணான்டோ ஆகியோரை பிணையில் விடுவித்தமை தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட மீளாய்வு மனுவை விசாரணைக்கு எடுத்துக் கொள்ள கொழும்பு மேல் நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது.

இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் குறித்த இரு சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டனர்.பின்னர் இருவரும் கொழும்பு பிரதம நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டதன் பின்னர் பிணையில் விடுவிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

எனினும் இதற்கு இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழு எதிர்ப்பு தெரிவித்து இந்த மீளாய்வு மனுவை தாக்கல் செய்தது.இதனையடுத்து, இந்த மனு தொடர்பில் ஆட்சேபனைகள் இருப்பின் ஒக்டோபர் 17ம் திகதிக்கு முன்னர் தெரியப்படுத்துமாறும், நிஸங்க சேனாதிபதி மற்றும் பாலித பெர்ணான்டோ ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப நீதவான் எம்.சீ.டீ.எஸ்.மொராயஸ் உத்தரவு பிறப்பித்தார்.

bribery

Related posts: