இலங்கை வான்பரப்பில் மர்ம ஒளி!  

Wednesday, August 10th, 2016

குருநாகல் மாவட்டத்தின் தஹய்யாகமுவ மற்றும் தெனியாய பிரதேச வான்பரப்பில் நேற்றிரவு மர்ம ஒளி ஒன்றினை பிரதேசவாசிகள் அவதானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மிகவும் வேகத்துடன் குறித்த ஒளி மறைந்து சென்றதாகவும் பிரதேசவாசிகள் தெரிவித்துள்ளனர். இந்த ஒளி மறைந்து சென்ற சில நிமிடங்களில் புதுவகையான நறுமணம் ஒன்றை பிரதேசவாசிகளால் நுகரக் கூடியதாக இருந்ததாகவும் குறிப்பிட்டுள்ளனர்.

குறித்த நறுமணம் மல்லிகைப் பூவின் நறுமணத்தை ஒத்திருந்ததாகவும், இதனை நுகர்வதற்கு மிகவும் சிரமப்பட்டதாகவும் பிரதேசவாசிகள் தெரிவித்துள்ளனர். மேலும், வண்டியின் சக்கரத்தை ஒத்ததாகவும்,சிவப்பு நிற தீப்பிழம்புகள் போன்று அதன் ஒளி காணப்பட்டதாகவும் இதனை நேரில் கண்ணுற்றவர்கள் தெரிவித்துள்ளனர்.

Related posts: