இலங்கை வருகின்றார் பான் கீ மூன்!

Thursday, June 30th, 2016

ஐக்கிய நாடுகளின் பொதுச்செயலாளர் பான் கீ மூன் இந்த வருடம் இலங்கை வரவுள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையில் நேற்று உரையாற்றிய வெளியுறவு அமைச்சர் மங்கள சமரவீர இதனை தெரிவித்துள்ளார்.

“சர்வதேச சமூகத்துக்கு தைரியம் மற்றும் நம்பிக்கை தரும் வகையில் இலங்கை இன்று உலகத்துடன் இணைந்து செயற்படுகிறது” என்று ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் செய்ட் ராட் அல் ஹூசைன்  இலங்கைக்கு கடந்த பெப்ரவரி மாதம் வந்திருந்தார்.

அதேபோன்று இந்த வருடத்துக்குள் ஐக்கிய நாடுகளின் பொதுச்செயலாளர் பான் கீ மூனும் இலங்கைக்கு வருவார் என்று நம்பிக்கையுள்ளது என்று மங்கள சமரவீர தெரிவித்துள்ளர்.

Related posts: