இலங்கை முதலீட்டு சபை நிறுவனங்களின் உற்பத்தி ஊரடங்கு காலத்திலும் தொடரும் என அறிவிப்பு!

Thursday, October 22nd, 2020

கம்பஹா மாவட்டத்தில் அமைந்துள்ள இலங்கை முதலீட்டுச்சபை தொழிற்சாலைகள் ஊரடங்கு காலத்திலும் எவ்வித இடையூறுமின்றி இயங்குமென உறுதியளித்துள்ளது.

கட்டுநாயக்க, பியகம, வத்துபிட்டிவல, மல்வத்த மற்றும் மீரிகம ஆகிய ஏற்றுமதி வலயங்களிலுள்ள நிறுவனங்கள் உற்பத்தியைத் தொடரும் என்பதுடன் சுகாதார அமைச்சினால் வழங்கப்பட்டுள்ள சுகாதார பாதுகாப்பு வழிமுறைகள் கண்டிப்பாக கடைப் பிடிக்கப்படும் என ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

மேற்குறிப்பிட்ட வலயங்கள் தவிர்ந்த வெளியிடங்களில் அமைந்துள்ள முதலீட்டு சபையில் பதிவு செய்யப்பட்ட தொழிற்சாலைகளும் இயங்கவுள்ளன.

இதேவேளை ஊரடங்கு குறித்த முதலீட்டு சபையின் நடைமுறைகள் அதன் www.investsrilanka.com. இணையத்தளத்தில் உள்ளதாகவும் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: