இலங்கை மாணவர்களுக்கு புலமைப்பரிசில்! இந்திய உயர்ஸ்தானிகராலயம் அறிவிப்பு

Saturday, December 24th, 2016

2017 கல்வியாண்டில் இலங்கை மாணவர்களுக்கு இந்தியாவில் கல்வி கற்பதற்கான புலமைப்பரிசில்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இது தொடர்பான தகவல்கள் இந்திய உயர்ஸ்தானிகராலயத்தில் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது.

நேரு ஞாபகார்த்த புலமைப்பரிசில் திட்டத்தின் கீழ் 100 இலங்கை மாணவர்களுக்கு இந்தியாவில் பட்டப்படிப்பை தொடர்வதற்கான வாய்ப்பு கிடைக்கும்.

மருத்துவம் தவிர்த்த பொறியியல், விஞ்ஞானம், பொருளாதாரம், வர்த்தகம், மானுடவியல், கலை போன்ற துறைகளில் இலங்கை மாணவர்களுக்கு புலமைப்பரிசில் வழங்கப்படவுள்ளது.

மௌலானா, ஆஸாத் புலமைப்பரிசில் திட்டத்தின் கீழ் 50 இலங்கை மாணவர்களுக்கு இந்தியாவில் பட்டப் படிப்பை தொடர்வதற்கான புலமைப்பரிசிலையும் பெற்றுக்கொள்ள முடியும்.விவசாயம், விஞ்ஞானம், கலை,பொறியியல், பொருளியியல் ஆகிய துறைகளில் புலமைப்பரிசில்களை பெற்றுக்கொள்ளும் வாய்ப்பும் இலங்கை மாணவர்களுக்கு கிடைக்கும்.

ராஜீவ்காந்தி புலமைப்பரிசில் திட்டத்தின் கீழ் 25 மாணவர்களுக்கு இந்தியாவின் தகவல் தொழில்நுட்பம், பொறியியல் ஆகிய துறைகளில் பட்டப்படிப்பை தொடரலாம்.ஐந்து இலங்கையர்களுக்கு மருத்துவம் தவிர்ந்த துறைகளில் கலாநிதி கற்கைக்கான புலமைப்பரிசில்களை பெற்றுக்கொள்ளலாம்.

இது தொடர்பான மேலதிக விபரங்களை இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் ஆலயத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் பெற்றுக்கொள்ளலாம்.உயர்கல்வி அமைச்சின் உத்தியோகபூர்வ இணையத்தளமான www.mohe.gov.lk என்ற இணையத்தள முகவரியில் விண்ணப்பப்படிவங்களை இலங்கை மாணவர்கள் தரவிறக்கம் செய்து கொள்ள முடியும்.

Scholarships

Related posts: