இலங்கை போக்குவரத்து சபையின் கடன்தொகை 16,000 மில்லியனாக அதிகரிப்பு!

Saturday, June 11th, 2016
இலங்கை போக்குவரத்து சபையின் கடன்தொகை 16,000 மில்லியனாக அதிகரித்துள்ளதாகதெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று பாராளுமன்றில் இலங்கை போக்குவரத்து சபையின் மறுசீரமைப்பு தொடர்பாக இடம்பெற்ற விவாதத்தின் போது கலந்துகொண்டு உரையாற்றும் போது போக்குவரத்துஅமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் இலங்கைப் போக்குவரத்து சபையில் கடமையாற்றும் 36,000 பணியாளர்களில் 12,000 பேர் பணிநீக்கம் செய்யப்படவுள்ளமை தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர்தினேஸ் குணவர்த்தன கேள்வி எழுப்பியுள்ளார். அதற்கு பதிலளித்த போக்குவரத்து அமைச்சர் ‘ 69 மில்லியன் தினசரி வருமானம்போதுமான அளவு இல்லை. அதைவிட அதிகமாக இலங்கை போக்குவரத்து சபையை கொண்டுசெல்வதற்கு 1350 மில்லியன் ரூபாய்கள் அரசிற்கு தேவையாகவுள்ளதாக அமைச்சர்தெரிவித்துள்ளார்.
அத்துடன் கடந்த 5 வருடங்களாக குறித்த பணியாளர்களின் சேமலாப நிதியானதுவங்கிகளில் வைப்பிலிடப்படவில்லை என்றும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். மேலும் 2015ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் பணியாளர்களின் சேமலாப நிதி உள்ளிட்டவை மாதாந்தம் வங்கிகளில் அரசாங்கம்வைப்பிலிடப்படுவதாகவும், பணியாளர்களை பணி நீக்கம் செய்வது அரசாங்கத்தின்செயற்பாடு இல்லை என்றும் அமைச்சர் நிமல் சிறிபாடி சில்வா சுட்டிக்காட்டியுள்ளார்.

Related posts: