இலங்கை போக்குவரத்து சபையில் தானாக முன்வந்து ஓய்வுபெறும் முறையொன்று அறிமுகப்படுத்தவுள்ளது – போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா

Wednesday, May 4th, 2016

இலங்கை போக்குவரத்து சபையின் மேலதிக ஊழியர்கள் இழப்பீடு பெற்றுக்கொண்டு தானாக முன்வந்து ஓய்வுபெறும் முறையொன்றை அறிமுகப்படுத்தவுள்ளதாக போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.

அரசியல் பழிவாங்கல்களுக்குள்ளாகி வேலைவாய்புக்களை இழந்த போக்குவரத்து சேவையாளர்கள் மற்றும் ஒய்வூதியங்கள் பெற்று கொடுகக்கப்படாதவர்களுக்கு இழப்பீடுகளை பெற்று கொடுப்பது தொடர்பான நிகழ்வொன்றில் கலந்து கொண்ட போது அவர் இதனை தெரிவித்துள்ளார்.

குறித்த தீர்மானங்கள் எதிர்வரும் வாரத்தில் அமைச்சரவையில் சமர்பிக்கப்படவுள்ளதுடன், இலங்கை போக்குவரத்து சபை சாரதிகள், நடத்துனர்கள் மற்றும் தொழில்நுட்பத்துடன் தொடர்புடைய ஊழியர்களுக்கு மேற் கூறப்பட்ட யோசனை உள்ளடங்காது என அவர் மேலும் தெரிவித்தார்

Related posts: