இலங்கை பெருந்தோட்டத் தொழிலாளர்கள் ஏமாற்றம்!

Wednesday, September 14th, 2016

இலங்கையில் மலையகப் பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு அரசாங்கத்தினால் அறிவிக்கப்பட்டிருந்த இடைக்கால கொடுப்பனவு 2,500 ரூபா இம்மாத சம்பளத்தில் வழங்கப்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த ஜுன் மற்றும் ஜுலை மாதங்களுக்கு வழங்கப்பட்டிருந்த இக்கொடுப்பணவு, இம் மாத சம்பளத்திலும் சேர்த்து கிடைக்கும் என எதிர்பார்த்திருந்த தங்களுக்கு இதனால் ஏமாற்றமாகிவிட்டதாக தொழிலாளர்களினால் கவலை வெளியிடப்பட்டுள்ளது.

மலையகப் பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு இக்கொடுப்பணவு வழங்குவது தொடர்பாக நாடாளுமன்றத்தில் சட்ட மூலமொன்றும் சில மாதங்களுக்கு முன்னர் நிறைவேற்றப்பட்டிருந்தது.

தேயிலைத் தோட்டங்கள் நஷ்டத்தில் இயங்குகின்ற காரணத்தை முன் வைத்து தோட்ட நிர்வாகங்கள் அதனை வழங்க மறுத்திருந்தன. இருந்தபோதிலும் நிதி அமைச்சகத்தால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சிறப்பு வங்கிக் கடன் மூலம் இரு மாதங்களுக்கு இக்கொடுப்பணவு வழங்கப்பட்டது.

அந்தக் கொடுப்பணவு கூட தங்களுக்கு முழுமையாக கிடைக்கவில்லை. வேலைக்கு சமூகமளித்த நளொன்றுக்கு ரூபாய் 100 என கணக்கிடப்பட்டு தான் கிடைத்ததாக கூறும் தொழிலாளர்கள், நிரந்தர சம்பள உயர்வு கிடைக்கும் வரை இடைக்கால கொடுப்பணவு கிடைக்க வேண்டும என தொழிலாளர்களும் தொழிற்சங்கங்களும் எதிர்பார்ப்பதாக கூறுகின்றனர்.

ஆனால் தொடர்ந்தும் வங்கிக் கடன் பெற்று அக்கொடுப்பணவை வழங்குவது சாத்தியப்படாது என தோட்ட நிர்வாகங்கள் குறிப்பிடுகின்றன.

_91182340_salary

Related posts:

பெண்களுக்கு  உரிய மதிப்பினை வழங்குவதன் மூலம் ஆரோக்கியமான சமுதாயத்தைக் கட்டியெழுப்புவோம்: யாழ். இந்தி...
வடமராட்சி கிழக்கில் அதிகாலை கடற்படையினர் திடீர் சோதனை - 239 கிலோ கேரளா கஞ்சாவுடன் இருவர கைது!
உள்ளூராட்சி மன்றங்களின் நிர்வாகம் தொடர்பில் விசேட கவனம் செலுத்த வேண்டும் - மாகாண ஆளுநர்களிடம் பிரதமர...