இலங்கை பெட்மிண்டன் சங்கத்தின் பதிவு இரத்து!

இலங்கை பெட்மிண்டன் சங்கத்தின் பதிவு உடனடியாக அமுலாகும் வகையில் இரத்து செய்யப்பட்டுள்ளது. விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகவின் கையொப்பத்துடன் வெளியிடப்பட்டுள்ள விஷேட வர்த்தமானி அறிவித்தலில் இந்த விடயம் கூறப்பட்டுள்ளது.
அதேவேளை இலங்கை பெட்மிண்டன் சங்கத்தின் நடவடிக்கைகளை முன்னெடுத்துச் செல்வதற்கான அதிகாரமுள்ளவராக விளையாட்டு அபிவிருத்தி திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகத்தை தற்காலிகமாக நியமிப்பதாகவும் அந்த வர்த்தமானி அறிவித்தலில் கூறப்பட்டுள்ளது.
அத்துடன் விரைவில் இலங்கை பெட்மிண்டன் சங்கத்திற்கான தேர்தலை நடத்துவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
Related posts:
டிவில்லியர்ஸ் உதவியுடன் இறுதிப் போட்டிக்கு முன்னேறிய பெங்களூரு!
கொரோனா தடுப்பூசியை இலங்கைக்கு விரைவாக கொண்டுவர நடவடிக்கை - ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ச தெரிவிப்பு!
சுபீட்சத்தின் நோக்கு திட்டத்தின் கீழ் சிறிய ஏற்றுமதிப் பயிர்களை ஊக்குவிக்க விசேட வேலைத்திட்டம் - பெர...
|
|