இலங்கை பணியாளர்களுக்கு எச்சரிக்கை!

சவுதியில் தொழில் தருனருக்கு எதிராக போலிக் குற்றச்சாட்டுகளை முன்வைக்கும் இலங்கைப் பணியாளர்களுக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணிமனை தெரிவித்துள்ளது.
பணிப்பெண்களாக சென்று சவுதியில் பணியாற்றும் இலங்கைப் பெண்கள், தொழில் தருனர்கள் குறித்த குற்றச்சாட்டுகளை அதிக அளவில் முன்வைக்கின்றனர். இவ்வாறு பல உண்மைக் குற்றச்சாட்டுகள் இருக்கின்ற போதும், சிலர் போலியான குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருவதாக தெரியவந்துள்ளது. அவ்வாறானவர்களுக்கு எதிராக சவுதியில் 5 தொடக்கம் 20 ஆண்டுகள் வரையில் சிறை தண்டனை விதிக்கப்படும் என்று சவுதியின் காவற்துறையினர் எச்சரித்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related posts:
அதிகமாக சிம் அட்டைகளை வாங்க முடியாத வகையில் பாதுகாப்பு அமைச்சு நடவடிக்கை!
சுகாதார பாதுகாப்பை உறுப்படுத்துவதற்காக நாட்டிலுள்ள பாடசாலைகளுக்கு 370 இலட்சம் ரூபா நிதி ஒதுக்கீடு -...
பயிற்றுவிக்கப்பட்ட தொழிற்றுறைகளைச் சார்ந்தோரை வெளிநாட்டு வேலை வாய்ப்புகளுக்கு அனுப்பும் பணி ஆரம்பம்!
|
|