இலங்கை நிதி புலனாய்வுப் பிரிவு – உள்நாட்டு இறைவரி திணைக்களம் புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்து!

Thursday, October 27th, 2016

இலங்கை நிதி புலனாய்வுப் பிரிவு உள்நாட்டு இறைவரி திணைக்களத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றில் கைச்சாத்திட்டுள்ளது.

நிதி தூய்மையாக்கல், பயங்கரவாதத்திற்கு நிதி வழங்குதல் தொடர்பான விசாரணைகள், வழக்குகள் என்பனவற்றிற்குத் தேவையான தகவல்களை வழங்குவது இதன் நோக்கமாகும்.

இந்த இருதரப்பு ஒத்துழைப்பின் மூலம் வரி செலுத்தத் தவறுவதை தடுக்கவும், நிதி தூய்மையாக்கலை ஒழிக்கவும் இது உதவும் என்று இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.

இறைவரித் திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் கல்யாணி தஹநாயக்க, நிதி புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளர் எச்.அமரதுங்க ஆகியோர் இந்த ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளார்கள்.

4dae6cf74b5da90083e567687c5b059d_L

Related posts: