இலங்கை தேயிலைக்கு புவியியல் குறிகாட்டியுடன் விஞ்ஞான சான்றிதழ்!

Tuesday, February 2nd, 2021

இலங்கை தேயிலைக்கான புவியியல் குறிகாட்டியுடன் விஞ்ஞான சான்றிதழை வழங்குவதற்கான ஒரு முன்னோடி திட்டத்திற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றை கைச்சாத்திட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அணுசக்தி சபையின் தலைவர் பேராசிரியர் எஸ்.ஆர்.வி ரோசா தெரிவித்துள்ளார்.

அத்துடன் அணுசக்தி சபையும், இலங்கை தேயிலை ஆராய்ச்சி நிறுவகமும் இந்த புரிந்துணர்வு உடன்படிக்கையில் கைச்சாத்திட்டுள்ளதாக அணுசக்தி சபையின் தலைவர் பேராசிரியர் எஸ்.ஆர்.வி ரோசா தெரிவித்துள்ளார்.

தரமற்ற தேயிலையை நமது நாட்டின் தேயிலையுடன் கலந்து, இலங்கையின் தேயிலையின் நாமத்துக்கு பாதிப்பு ஏற்படும் வகையில் செயற்படுகின்றமையை, இதனூடாக அறிவியல் பூர்வமாக உறுதி செய்ய முடியும் என்றும் அவர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts: